தமிழ் நிழல் யின் அர்த்தம்

நிழல்

பெயர்ச்சொல்

 • 1

  ஒளியை ஒரு பொருள் தடுப்பதால் அதன் மறுபுறம் தோன்றும் இருண்ட பகுதி.

  ‘மெழுகுவர்த்தியின் ஒளியில் என் நிழல் பூதாகரமாகத் தெரிந்தது’
  ‘மரத்தின் நிழல் சாலையில் நீண்டு படர்ந்து கிடந்தது’
  ‘அரசமர நிழலில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்’
  உரு வழக்கு ‘அவள் கண்ணில் கவலையின் நிழல் தெரிந்தது’
  உரு வழக்கு ‘அவர் மனத்தில் சந்தேகத்தின் நிழல் படர்ந்திருந்தது’
  உரு வழக்கு ‘அவருடைய நிழலில் வளர்ந்தவன் நான்’
  உரு வழக்கு ‘அவனுடைய நிழல்கூட இந்த அலுவலகத்தில் படக் கூடாது’

 • 2

  ஒரு இடத்துக்கும் ஒளிக்கும் இடையில் இருப்பதால் கருமை நிறப் பிம்பமாகத் தோன்றும் உருவம் அல்லது வடிவம்.

  ‘வாசல் பக்கத்தில் ஏதோ நிழல் தெரிந்ததும் நிமிர்ந்து பார்த்தான்’

 • 3

  சூரிய ஒளி நேரடியாகப் படாத அல்லது புகாத இடம்.

  ‘நிழலில் உட்கார்ந்து வேலைசெய்கிற உனக்கே இவ்வளவு சிரமமாக இருந்தால் நாள் முழுதும் வெயிலில் அலைகிற எங்களுக்கு எப்படி இருக்கும்?’
  ‘மூலிகைகளை நிழலில் காயவைக்க வேண்டும்’