தமிழ் நிழலாடு யின் அர்த்தம்

நிழலாடு

வினைச்சொல்-ஆட, -ஆடி

  • 1

    (சந்தேகம், பயம் போன்ற உணர்வுகள்) மனத்தில் மெலிதாகத் தோன்றுதல்/(சோகம், துன்பம் போன்றவை) லேசாகப் புலப்படுதல்.

    ‘அவர்களிடையே நிழலாடிய சந்தேகம் இன்று இருவரையும் நிரந்தரமாகப் பிரித்துவிட்டது’
    ‘வறட்சியால் மக்கள் படப்போகும் கஷ்டங்கள் என் கண்முன் நிழலாடின’
    ‘சோகம் நிழலாடும் முகம்’