தமிழ் நீங்கு யின் அர்த்தம்

நீங்கு

வினைச்சொல்நீங்க, நீங்கி

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (பசி, நோய், அழுக்கு, நாற்றம், விஷம் முதலியவை ஒன்றிலிருந்து அல்லது ஒருவரிடமிருந்து) இல்லாமல் போதல்; தீர்தல்.

  ‘வயிறு நிறைய தண்ணீர் குடித்த பிறகு பசி நீங்கியது போலிருந்தது’
  ‘பலரும் தைரியம் கூறிய பிறகுதான் அவருக்கு பயம் நீங்கியது’
  ‘எண்ணெய்ப் பசை நீங்கச் சீயக்காய்த் தூள் தேய்த்துக் குளிக்கலாம்’
  ‘பாம்பு கடித்த விஷம் நீங்குவதற்குச் சிறியாநங்கையைப் பயன்படுத்தலாம் என்று சொல்வார்கள்’

 • 2

  உயர் வழக்கு (ஒருவரை விட்டு) அகலுதல்; (ஒன்றிலிருந்து) விலகுதல்.

  ‘மக்கள் வேலை தேடிச் சொந்த ஊரிலிருந்து நீங்கி நகரம் வந்து குவிகின்றனர்’
  ‘மனத்தை விட்டு நீங்காத நினைவுகள்’