தமிழ் நதி யின் அர்த்தம்

நதி

பெயர்ச்சொல்

 • 1

  ஆறு.

  ‘கங்கை நதி’

தமிழ் நீதி யின் அர்த்தம்

நீதி

பெயர்ச்சொல்

 • 1

  (சட்டம், சமூக நெறி ஆகியவற்றின் அடிப்படையில் வழக்கு, பிரச்சினை போன்றவற்றில்) காரணங்களைக் கூறி நடுநிலைமையோடு வழங்கும் முடிவு.

  ‘‘எனக்கு நீதி வழங்க வேண்டும் மன்னா!’ என்றார் புலவர்’

 • 2

  எது சரி, எது தவறு என்ற ஒழுங்கு.

  ‘பெரியவர் நீதி, நியாயம் தெரிந்தவர்’

 • 3

  (சம்பவம், கதை போன்றவற்றின் மூலம் கிடைக்கும்) நெறிப்படுத்தும் கருத்து.

  ‘தீமை செய்தவனுக்குத் தீமையே விளையும் என்பதே இந்தக் கதையின் நீதி’