தமிழ் நீர்வழி யின் அர்த்தம்

நீர்வழி

பெயர்ச்சொல்

 • 1

  கப்பல், படகு போன்றவை செல்ல ஆதாரமாக அமையும் கடல், ஆறு போன்ற நீர்ப்பரப்பு.

  ‘பண்டைக் காலத்தில் நிலத்தின் வழியாகவும் நீர்வழியாகவும் அராபியர்கள் தமிழகத்தோடு வாணிபம் நடத்தினர்’
  ‘நதிகளை இணைப்பதன்மூலம் நீர்வழிப் போக்குவரத்து அதிகரிக்கும்’
  ‘சென்னையில் உள்ள அடையாறு, கூவம் ஆகிய நீர்வழிகளைச் சீர்படுத்த அரசு நிதி ஒதுக்கியுள்ளது’
  ‘நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்துவருகிறது’