தமிழ் நுகத்தடி யின் அர்த்தம்

நுகத்தடி

பெயர்ச்சொல்

  • 1

    (வண்டி, ஏர் முதலியவற்றை இழுத்துச்செல்வதற்காக மாட்டின் கழுத்தில்) பிணைப்பதற்கான நீண்ட தடி.

    ‘நுகத்தடி அழுத்திஅழுத்தி எருதுகளின் கழுத்து காய்ப்பேறியிருந்தது’
    உரு வழக்கு ‘மரபின் நுகத்தடியை உதறியெறிவது அவ்வளவு சுலபம் இல்லை’