தமிழ் நுட்பம் யின் அர்த்தம்

நுட்பம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  பல அம்சங்கள் கொண்ட சிக்கலான ஒன்றில் மேலோட்டமாகத் தெரியாத உள்ளடங்கிய அம்சம்; நுணுக்கம்.

  ‘விமானத்தில் ஏற்பட்டிருந்த நுட்பமான கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது’
  ‘கலை நுட்பம் வாய்ந்த சிற்பங்கள்’
  ‘கட்டடக் கலையின் நுட்பங்களுக்குச் சான்றாக விளங்கும் தஞ்சை பெரிய கோயில்’
  ‘நாட்டியக் கலையின் நுட்பங்கள் அறிந்த நர்த்தகி இவர்’
  ‘சிக்கலான அறுவைச் சிகிச்சையை எளிதாக்கும் விதத்தில் நுட்பமான நவீனக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன’
  ‘விஞ்ஞான நுட்பங்களை விளக்குவது சுலபமல்ல’

 • 2

  மிகச் சிறிய அம்சத்தையும் கவனிக்கும் தன்மை; கூர்மை.

  ‘நுட்பமான ஆராய்ச்சி’
  ‘கூட்டுக்குடும்பத்தில் எழும் பிரச்சினைகளை நுட்பமாகச் சித்தரிப்பதில் ஆசிரியர் வெற்றிகண்டிருக்கிறார்’
  ‘நுட்பம் மிகுந்த அறிவு’
  ‘நீதிபதி இரு தரப்பு வாதங்களையும் நுட்பமாக ஆராய்ந்து தீர்ப்பு வழங்கினார்’

 • 3

  (அளவில்) நுண்மை.

  ‘நுட்பமான உயிர்கள்’
  ‘நுட்பமான அணுக்கள்’
  ‘நுரையீரலில் மிக நுட்பமான சிற்றறைகள் உள்ளன’