தமிழ் நுணுக்கு யின் அர்த்தம்

நுணுக்கு

வினைச்சொல்நுணுக்க, நுணுக்கி

 • 1

  (கல் முதலியவற்றால் தட்டி அல்லது அம்மியில் வைத்து) பொடியாக்குதல்; தூளாக்குதல்.

  ‘பெருங்காயத்தை அம்மியில் வைத்து நுணுக்கிக் கொடு’
  ‘மாத்திரையை நுணுக்கித் தேனில் கலந்து குழந்தைக்குக் கொடுத்தாள்’

 • 2

  (எழுதும்போது எழுத்தை) மிகச் சிறியதாக்குதல்.

  ‘இப்படி நுணுக்கி எழுதினால் எப்படிப் படிக்க முடியும்?’