தமிழ் நுனி யின் அர்த்தம்

நுனி

பெயர்ச்சொல்

 • 1

  (மரம், செடி போன்றவற்றின்) மேல்பக்க முனை/(நூல் போன்றவற்றின்) ஒரு முனை.

  ‘நெற்பயிரின் நுனி கருகிச் சுருண்டிருந்தது’
  ‘குரங்கு மரத்தின் நுனிக் கிளையில் உட்கார்ந்துகொண்டது’
  ‘நூலின் நீளம் என்பது ஒரு நுனியிலிருந்து மறு நுனிவரை உள்ள தூரம்’
  ‘கழியின் நுனியைச் சீவினார்’
  ‘விளக்கில் எண்ணெய் தீர்ந்துபோனதால் திரியின் நுனி கருக ஆரம்பித்தது’
  ‘கரும்பின் நுனியில் உள்ள தோகையை வெட்டி எறிந்தார்’
  ‘நுனியை உடைத்துப்பார்த்து வெண்டைக்காய் வாங்கினார்’

 • 2

  (குறுகி அல்லது நீண்டு காணப்படும் ஒன்றின்) முன்பகுதி; (மேஜை முதலியவற்றின்) இரு பக்கங்களும் இணையும் இடம்; முனை.

  ‘அரிவாளின் நுனி மழுங்கியிருந்தது’
  ‘பென்சிலின் நுனி கூராக இருந்தது’
  ‘கலப்பையின் நுனி காலில் இடித்துப் புண்ணாகிவிட்டது’
  ‘அவசரப்பட்டுப் பேசிவிட்டோமோ என்று நாக்கு நுனியைக் கடித்துக்கொண்டார்’
  ‘வேட்டி நுனியைச் சுருட்டிக் காதில் விட்டுக் குடைந்தார்’
  ‘வேகமாக வந்ததால் மேஜை நுனியில் இடித்துக்கொண்டுவிட்டேன்’