நுரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நுரை1நுரை2

நுரை1

வினைச்சொல்நுரைக்க, நுரைத்து

 • 1

  நுரை உருவாதல்/நுரையை உருவாக்குதல்.

  ‘குதிரையின் வாயில் நுரைத்திருந்தது’
  ‘வெண்ணெய் நுரைத்து அடங்கியதும் இறக்கிவிடு’
  ‘இந்தக் கிணற்று நீரில் சோப்பு நுரைக்காது’

நுரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நுரை1நுரை2

நுரை2

பெயர்ச்சொல்

 • 1

  (திரவங்களில்) அடர்த்தியான சிறுசிறு வெள்ளை நிறக் குமிழிகளின் தொகுப்பு.

  ‘நுரை ததும்பச் சூடான காப்பியைக் கொண்டுவந்து வைத்தாள்’
  ‘பாம்பு கடித்து இறந்திருந்த மனிதனின் வாயில் நுரை வழிந்திருந்தது’
  ‘உப்பு நீரில் சோப்புப் போட்டால் அதிகமாக நுரை வராது’