தமிழ் நுரைதள்ளு யின் அர்த்தம்

நுரைதள்ளு

வினைச்சொல்-தள்ள, -தள்ளி

 • 1

  (விபத்து, நோய் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது அல்லது விலங்குகள் கடுமையான உழைப்பினால் அவதிப்படும்போது வாயில்) நுரை வெளிப்படுதல்.

  ‘விஷப் பாம்பு கடித்தால் வாயில் நுரைதள்ளும்’
  ‘வேகமாக ஓடிவந்த குதிரைக்கு வாயில் நுரைதள்ளியிருந்தது’

 • 2

  (ஒன்றைச் செய்து முடிக்க) பெரும் பாடுபடுதல்/(ஒன்றைச் செய்து முடிப்பதற்குள்) திணறிப்போதல்.

  ‘வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் நுரைதள்ளிவிட்டது’
  ‘மகன் படிப்புக்காக வாங்கிய கடனை அடைப்பதற்குள் நுரைதள்ளிவிடும் போலிருக்கிறது’
  ‘இந்த ஆண்டுக்கான கணக்குகளைப் பார்த்து முடிப்பதற்குள் நுரைதள்ளிவிட்டது’