தமிழ் நுழைவுச் சீட்டு யின் அர்த்தம்

நுழைவுச் சீட்டு

பெயர்ச்சொல்

 • 1

  (கட்டுப்பாடுகள் இருக்கும்) ஓர் இடத்தின் உள்ளே செல்வதற்கு அனுமதி அளித்து அதிகாரபூர்வமாக வழங்கப்படும் சீட்டு.

  ‘நுழைவுச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அணுமின் நிலையத்தினுள் அனுமதிக்கப்படுவார்கள்’
  ‘நுழைவுச் சீட்டு வைத்திருந்த பத்திரிகையாளர்கள் மட்டுமே பிரதமர் அளித்த பேட்டியில் கலந்துகொண்டனர்’
  ‘நுழைவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் சட்டசபைக்குள் பார்வையாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள்’

 • 2

  பொருட்காட்சி, திரையரங்கு போன்றவற்றின் உள்ளே செல்லக் கட்டணம் செலுத்திப் பெறும் அனுமதிச் சீட்டு.

  ‘புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுச் சீட்டு ஐந்து ரூபாய்’