தமிழ் நூதனம் யின் அர்த்தம்

நூதனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  வழக்கமானவற்றிலிருந்து மாறுபட்டது; பழைய முறையிலிருந்து வேறுபட்டது; புதுமை.

  ‘இந்த நூதன காரில் இல்லாத வசதிகளே கிடையாது’
  ‘தங்கம் கடத்துபவர்கள் பல நூதன முறைகளைக் கையாளுகிறார்கள்’
  ‘எங்கள் சங்கத்தினர் நிதி திரட்ட நூதனமான முறையைக் கையாண்டனர்’
  ‘நூதனத் திருட்டு’