தமிழ் நூலகம் யின் அர்த்தம்

நூலகம்

பெயர்ச்சொல்

  • 1

    துறைவாரியாகப் பிரிக்கப்பட்டு, எண்ணிடப்பட்டு, அடுக்கப்பட்டுள்ள (பெரும்பாலும் வாங்கிப் படித்துவிட்டுத் திருப்பித் தரும்) புத்தகங்கள் உள்ள இடம்.

    ‘சரஸ்வதி மகால் நூலகத்தில் ஆயிரக்கணக்கான அரிய சுவடிகள் உள்ளன’
    ‘நடமாடும் நூலகம்’
    ‘இப்போது நூலகங்களில் ஒலிப்பதிவு நாடாக்களும் தொகுக்கப்படுகின்றன’