நூல் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நூல்1நூல்2நூல்3

நூல்1

வினைச்சொல்நூற்க, நூற்று

 • 1

  (கையால் அல்லது இயந்திரத்தின் உதவியால்) இழைகளைச் சேர்த்து நீளமான மெல்லிய தொடராக இருக்கும்படி முறுக்குதல்.

  ‘காந்தியடிகள் கைராட்டையில் நூல் நூற்றார்’

நூல் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நூல்1நூல்2நூல்3

நூல்2

பெயர்ச்சொல்

 • 1

  பஞ்சு, கம்பளி முதலியவற்றின் இழைகளைத் திரித்துத் தயாரிக்கப்படுவது.

  ‘நூல் விலை ஏறிவிட்டதால் நெசவாளர்கள் அவதிப்படுகின்றனர்’
  ‘வீட்டில் ஊசி, நூல் இல்லையா?’
  ‘பொட்டலம் கட்ட நூல் இல்லை’
  ‘இரண்டு கண்டு நூல் இருந்தால் பை பின்னலாம்’

 • 2

  பருத்தி இழை.

  ‘நூல் புடவை’

 • 3

  (சிற்ப வேலை, தச்சு வேலை போன்றவற்றில்) மிக நுண்ணிய அளவு.

நூல் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நூல்1நூல்2நூல்3

நூல்3

பெயர்ச்சொல்

 • 1

  புத்தகம்.

  ‘இந்த நூலகத்தில் பல அரிய நூல்கள் உள்ளன’
  ‘ஆங்கில நூல்’