தமிழ் நெகிழ் யின் அர்த்தம்

நெகிழ்

வினைச்சொல்நெகிழ, நெகிழ்ந்து

 • 1

  (உடுத்தியிருக்கும் வேட்டி, சேலை முதலியவற்றின் கட்டு அல்லது கயிற்று முடிச்சு போன்றவை) இறுக்கம் தளர்தல்.

  ‘இடுப்பு வேட்டி நெகிழ்ந்து அவிழ்ந்துவிடாமலிருக்க வார்ப்பட்டையைக் கட்டிக்கொள்வார்’
  ‘கட்டு நெகிழ்ந்திருந்ததால் மாடு ஓடிவிட்டது’

 • 2

  (அன்பு, பரிவு, இரக்கம் முதலியவற்றால் மனம்) இளகுதல்; (குரல்) தழுதழுத்தல்.

  ‘பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இரவுபகலாக மருத்துவர்கள் காயம்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்த காட்சி நெஞ்சை நெகிழவைத்தது’
  ‘எந்த விதத்திலும் என்னோடு சம்பந்தப்படாத நிலையில் அவர் என்மேல் வைத்திருந்த நம்பிக்கையை அறிந்து மனம் நெகிழ்ந்துபோனேன்’
  ‘இறைவன் சன்னதியில் அவர் உள்ளம் நெகிழ்ந்து பாடிக்கொண்டிருந்தார்’
  ‘‘நீங்கள் உதவியிருக்காவிட்டால் என் மகன் பிழைத்திருக்க மாட்டான்’ என்று சொல்லும்போதே அவர் குரல் நெகிழ்ந்துவிட்டது’

 • 3

  (இறுகி அல்லது கெட்டியாகக் காணப்படுவது) தளர்தல்.

  ‘நிலத்தைத் தோண்டும்போது மண்ணை நெகிழச் செய்யக் கடப்பாரை பயன்படுகிறது’
  ‘வறண்டுகிடந்த பூமி எளிதில் நெகிழ்ந்துகொடுக்கவில்லை’