தமிழ் நெசவு யின் அர்த்தம்

நெசவு

பெயர்ச்சொல்

 • 1

  (தறியில் நீளவாக்கிலும் குறுக்காகவும் நூல், சணல், கோரை போன்றவற்றைச் செலுத்தி) துணி, பாய் முதலியவை தயாரிக்கும் முறை.

  ‘உழவும் நெசவும் இந்தியாவில் முக்கியமான தொழில்கள்’
  ‘இந்த ஊரில் பாய் நெசவு செய்து பிழைக்கும் குடும்பங்கள் அதிகம்’

 • 2

  (துணி) நெய்யப்பட்ட விதம்.

  ‘புடவையின் நிறமும் நெசவும் நன்றாக இருக்கின்றன’