தமிழ் நெஞ்சம் யின் அர்த்தம்

நெஞ்சம்

பெயர்ச்சொல்

  • 1

    (உணர்வுகளின் இருப்பிடமாகக் கருதப்படும்) மனம்; உள்ளம்.

    ‘எத்தனை காலமானாலும் நெஞ்சம் இந்த நிகழ்ச்சியை மறக்காது’
    ‘வேலை கிடைத்த செய்தியைக் கேட்டதும் நெஞ்சம் மகிழ்ச்சியில் துள்ளியது’