தமிழ் நெஞ்சைப் பிசை யின் அர்த்தம்

நெஞ்சைப் பிசை

வினைச்சொல்பிசைய, பிசைந்து

  • 1

    (துயரம், துக்கம் போன்ற உணர்வுகள் ஒருவருடைய) உள்ளத்தை உருக்குதல்; மனத்தை வருத்துதல்.

    ‘விபத்தில் தன் இரண்டு கால்களையும் இழந்த அந்தச் சிறுவனின் துயரக் கதை நெஞ்சைப் பிசைந்தது’
    ‘சுனாமியால் பெற்றோரை இழந்துநிற்கும் குழந்தைகளின் முகம் என் நெஞ்சைப் பிசைகிறது’