தமிழ் நெட்டிமுறி யின் அர்த்தம்

நெட்டிமுறி

வினைச்சொல்-முறிக்க, -முறித்து

 • 1

  சோம்பல்முறித்தல்.

  ‘படுக்கையிலிருந்து நெட்டிமுறித்தவாறு எழுந்து நின்றான்’

 • 2

  வட்டார வழக்கு மடக்கிய அல்லது நீட்டிய விரல்களை அழுத்தி ஒலி உண்டாகுமாறு செய்தல்.

  ‘‘விளக்கு வைக்கும் நேரத்தில் நெட்டிமுறிக்காதே’ என்று பாட்டி திட்டினாள்’
  ‘பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் பையை வீட்டுக்குள் வீசி எறிந்துவிட்டுக் கைகளை ஒருமுறை நெட்டிமுறித்துக்கொண்டான்’

 • 3

  (தலை அல்லது கன்னத்தை வருடும் பாவனை செய்து) திருஷ்டி கழித்தல்.

  ‘தன் மகளின் முகத்தை வழித்து நெட்டிமுறித்தாள்’

தமிழ் நெட்டிமுறி யின் அர்த்தம்

நெட்டிமுறி

வினைச்சொல்-முறிக்க, -முறித்து

 • 1

  (செய்யும் வேலை ஒருவரின்) சக்தியை உறிஞ்சுதல்.

  ‘பெண்ணின் கல்யாண வேலை நெட்டிமுறித்துவிட்டது’
  ‘அம்மாவுக்குக் கடிதம் போடக்கூட நேரமில்லாமல் உனக்கு அப்படியென்ன நெட்டிமுறிக்கிற வேலை?’