நெட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : நெட்டு1நெட்டு2

நெட்டு1

வினைச்சொல்

 • 1

  (விசையோடு) தள்ளுதல்.

  ‘வீட்டுக்குள் போக முயன்றவனைக் காவலாளி வெளியே நெட்டிவிட்டான்’
  ‘குழந்தைகள் ஒருவரையொருவர் நெட்டி விளையாடிக்கொண்டிருந்தனர்’
  ‘கதவைப் பூட்டிவிட்டு நெட்டிப்பார்த்தான்’
  ‘வண்டிக்குள் ஏற முயன்றவனை மேலேயிருந்தவன் நெட்டித் தள்ளினான்’

நெட்டு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : நெட்டு1நெட்டு2

நெட்டு2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (பூ, இலை போன்றவற்றின்) காம்பு.

  ‘பூவை ஏன் நெட்டோடு பறிக்கிறாய்? பூ பழுதாகிவிடும்’
  ‘நெட்டைக் கிள்ளி எறிந்துவிட்டு வெற்றிலை போடத் தொடங்கினார்’