நெடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நெடு1நெடு2

நெடு1

வினைச்சொல்நெடுக்க, நெடுத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு உயரமாக வளர்தல்.

  ‘முருக்கம் மரம் நெடுத்ததினால் காய் பிடுங்கக் கஷ்டமாக இருக்கிறது’

நெடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நெடு1நெடு2

நெடு2

பெயரடை

 • 1

  (காலம்குறித்த சொற்களுடன் வரும்போது) நீண்ட.

  ‘அவர் எனது நெடு நாளைய நண்பர்’
  ‘நெடுநேரமாகக் காத்திருக்கிறேன். அவர் வருவதுபோல் தெரியவில்லை’