தமிழ் நெடுக யின் அர்த்தம்

நெடுக

வினையடை

 • 1

  (பாதை, வழி, எல்லை முதலியவற்றின்) முழு நீளத்திலும்.

  ‘தேர் செல்லும் பாதை நெடுக மக்கள் நின்றிருந்தனர்’
  ‘தொலைத்த பணத்தை வழி நெடுகத் தேடிக்கொண்டே வந்தான்’
  ‘எல்லை நெடுக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது’

 • 2

  வட்டார வழக்கு தொடர்ந்து.

  ‘அவர் நெடுக நடந்து கொண்டிருந்தார்’