தமிழ் நெட்டி யின் அர்த்தம்

நெட்டி

பெயர்ச்சொல்

 • 1

  தக்கை.

 • 2

  (அலங்காரப் பொருள்கள் செய்யப் பயன்படும்) மேற்குறிப்பிட்ட தாவரத்தின் கனமற்ற தண்டுப் பகுதி.

  ‘மாட்டுக்குப் போடுவதற்காக நான் நெட்டி மாலை வாங்கி வந்தேன்’
  ‘தேருக்கு நெட்டி அலங்காரம் செய்திருந்தார்கள்’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு புகையிலையின் நரம்பு.