தமிழ் நெம்பு யின் அர்த்தம்

நெம்பு

வினைச்சொல்நெம்ப, நெம்பி

  • 1

    (கனமான பொருள் அசையும் விதத்தில் அதன் அடியில் கடப்பாரை, நீளமான கழி போன்றவற்றைக் கொடுத்து) விசையுடன் அழுத்துதல்/(கம்பி போன்றவற்றைத் துளையின் அல்லது ஒரு பொருளின் அடியில் கொடுத்து) உரிய நிலைக்கு வருமாறு அழுத்துதல்.

    ‘பாறையைக் கடப்பாரையால் நெம்பித் தள்ளினார்கள்’
    ‘முரட்டுத்தனமாக ஆணியை நெம்பிக் கையைக் காயப்படுத்திக்கொள்ளாதே’
    ‘சாவியைத் தொலைத்துவிட்டதால் பூட்டுக்குள் கம்பியை விட்டு நெம்பித் திறக்க முயன்றான்’