நெரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நெரி1நெரி2

நெரி1

வினைச்சொல்நெரிய, நெரிந்து, நெரிக்க, நெரித்து

 • 1

  (குச்சி போன்று இருக்கும் ஒரு பொருள்) நசுங்குதல் அல்லது முறிதல்.

  ‘பீடி நெரிந்துபோயிருந்தது’

 • 2

  (புருவம்) சுருங்குதல்.

  ‘கோபத்தில் அவனது நெற்றி நரம்புகள் புடைத்து புருவங்கள் நெரிந்தன’

 • 3

  (கூட்டத்தில்) அதிக நெரிசல் ஏற்படுதல்.

  ‘கோயில் உள்ளே போக முடியாதபடி கூட்டம் நெரிந்தது’

நெரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நெரி1நெரி2

நெரி2

வினைச்சொல்நெரிய, நெரிந்து, நெரிக்க, நெரித்து

 • 1

  இறுக்கி அழுத்துதல்.

  ‘‘நான்தான் அவர் கழுத்தை நெரித்துக் கொலைசெய்தேன்’ என்று கைதி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தான்’

 • 2

  (கூட்டத்தில் அல்லது நெரிசலில்) ஒருவரை ஒருவர் முட்டிக்கொண்டும் தள்ளிக்கொண்டும் இருத்தல்.

  ‘பேருந்தில் ஒரே கூட்டம்; நெரித்துத் தள்ளிவிட்டார்கள்’

 • 3

  வட்டார வழக்கு (உளுந்து, துவரை போன்றவற்றின் பயறு வெளியே வருவதற்காக நெற்றைக் கையால்) அழுத்தி உடைத்தல்.

  ‘உளுந்து நன்றாகக் காய்ந்த பிறகுதான் நெரிக்க முடியும்’