தமிழ் நெரியேறு யின் அர்த்தம்

நெரியேறு

வினைச்சொல்-ஏற, -ஏறி

  • 1

    நெரிகட்டுதல்.

    ‘காலில் அடிபட்டதால் நெரியேறியிருக்கிறது’

  • 2

    (ஒருவரைப் பாம்பு, தேள் போன்றவை கடித்ததால்) உடலில் விஷம் விரைவாகப் பரவுதல்.

    ‘நெரியேறுவதற்குள் குழந்தையை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்ல வேண்டும்’