தமிழ் நெருக்கடி யின் அர்த்தம்

நெருக்கடி

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  பிரச்சினைகளும் சிரமங்களும் மிகுந்த நிலை; இக்கட்டு.

  ‘எப்படிப்பட்ட நெருக்கடியான நிலையிலும் அவர் யாரிடமும் உதவி கேட்டதில்லை’
  ‘பிரதமரின் திடீர் மரணம் நாட்டில் பெரிய நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது’

 • 2

  (தேவையான, அத்தியாவசியமான பொருள்கள் அல்லது இடம் போன்றவை) போதாத நிலை; கிடைக்காத நிலை; பற்றாக்குறை.

  ‘பண நெருக்கடி’
  ‘திருமணத்திற்கு எதிர்பார்த்ததைவிட அதிகக் கூட்டம் வந்ததால் இட நெருக்கடி ஏற்பட்டது’

 • 3

  (ஏதேனும் ஒரு பிரச்சினையால்) சிரமத்துக்கு உள்ளாகும் நிலை.

  ‘கடன் நெருக்கடி’
  ‘வேலை நெருக்கடி’