தமிழ் நெருக்கு யின் அர்த்தம்

நெருக்கு

வினைச்சொல்நெருக்க, நெருக்கி

 • 1

  (இட நெருக்கடியால் அல்லது கூட்டம் மிகுதியாக இருப்பதால் ஒருவரை ஒருவர்) இடித்துத் தள்ளுதல்.

  ‘கூட்டமே இல்லை, இருந்தும் ஏன் இப்படி நெருக்குகிறீர்கள்?’

 • 2

  இடைவெளி அதிகம் இல்லாமல் ஒன்றுக்கொன்று நெருங்கி அமையுமாறு செய்தல்.

  ‘பூக்களை நெருக்கிக் கட்டு’
  ‘நாற்றுகளை நெருக்கி நட்டிருக்கிறார்கள்’
  ‘அழுத்தம் காரணமாகக் காற்றிலுள்ள மூலக்கூறுகள் நெருக்கப்படுகின்றன’
  ‘தாய் தன் குழந்தையை நெஞ்சுடன் நெருக்கி அணைத்துக்கொண்டாள்’

 • 3

  (குறிப்பிட்ட ஒரு செயலைச் செய்யும்படியோ செய்யக் கூடாது என்றோ) நெருக்கடியை ஏற்படுத்துதல்; வலியுறுத்துதல்; வற்புறுத்துதல்.

  ‘அடுத்த வாரத்துக்குள் வாங்கிய கடனைத் திருப்பித்தர வேண்டும் என்று நெருக்கினார்’
  ‘இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் என்று வளரும் நாடுகளை வளர்ந்த நாடுகள் நெருக்குகின்றன’

 • 4

  நெரித்தல்.

  ‘வீட்டில் தனியாக இருந்த வயதான பெண்மணியின் கழுத்தைத் துணியால் நெருக்கிக் கொலை செய்திருக்கிறான்’
  ‘கழுத்துப்பட்டி கழுத்தை நெருக்குகிறது’