தமிழ் நெருடல் யின் அர்த்தம்

நெருடல்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (தன்னுடைய தவறான செயலால் அல்லது காரணம் புரியாத பிறருடைய செயலால் மனத்தில் ஏற்படும்) உறுத்தல்; பாதிப்பு.

  ‘தனக்கு உதவிசெய்த நண்பனுக்கு இப்போது உதவ முடியவில்லையே என்ற நெருடல்’
  ‘அவன் ஏன் அப்படிச் செய்தான் என்ற நெருடல் என் மனத்தில் இருந்துகொண்டே இருந்தது’

 • 2

  ஒன்றோடு ஒன்று பொருந்தாமல் உறுத்தும் நிலை.

  ‘கட்டுரையில் ஒரே ஒரு வாக்கியத்தில்தான் நெருடல்’
  ‘எங்கள் கட்சிக்கும் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் உள்ள உறவில் எவ்வித நெருடலும் இல்லை’