தமிழ் நெருடு யின் அர்த்தம்

நெருடு

வினைச்சொல்நெருட, நெருடி

 • 1

  ஒரு பரப்பில் பட்டு இயல்புக்கு மாறான உணர்வை ஏற்படுத்துதல்; உறுத்துதல்.

  ‘காலில் ஏதோ நெருடியவுடன் சட்டென்று கீழே பார்த்தான்’
  ‘முதுகில் ஏதோ நெருடுவது போன்ற உணர்வு’

 • 2

  (ஒன்று ஒரு சூழ்நிலையில் இயல்பாக இல்லாமல்) மனத்தை உறுத்துதல்.

  ‘கடிதத்தின் வாசகங்கள் மனத்தை நெருடின’
  ‘அவளைத் தனியாக சென்னைக்கு அனுப்பிவைத்தது என் மனத்தை நெருடிக்கொண்டிருந்தது’
  ‘பாட்டின் மூன்றாவது வரிதான் கொஞ்சம் நெருடுகிறது’