தமிழ் நெற்றி யின் அர்த்தம்

நெற்றி

பெயர்ச்சொல்

 • 1

  (மனிதரில்) தலை முடிக்குக் கீழும் புருவத்துக்கு மேலும் உள்ள பகுதி; (விலங்குகளில்) கண்களுக்கு மேலே உள்ள பகுதி.

  ‘நெற்றியில் அகலமான குங்குமப் பொட்டு’
  ‘நெற்றி நிறைய திருநீறு பூசியிருந்தார்’
  ‘குழந்தைக்கு ஜுரம் அடிக்கிறதா என்று நெற்றியைத் தொட்டுப்பார்த்தாள்’
  ‘மாட்டின் நெற்றியில் ஒரு சுழி இருந்தது’