நெறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நெறி1நெறி2

நெறி1

வினைச்சொல்நெறிக்க, நெறித்து

 • 1

  (கோபம் முதலியவற்றால்) நெற்றியையும் புருவங்களையும் நெருக்குதல்.

  ‘புருவத்தை நெறித்து என்னைப் பார்த்தார்’

 • 2

  (சாபமிடும்போது இரண்டு கை விரல்களையும் கோத்து) சொடக்குச் சத்தம் கேட்கும்படி வளைத்தல்.

  ‘‘நீ நாசமாய்ப் போ’ என்று கைகளை நெறித்துச் சாபமிட்டாள்’

 • 3

  காண்க: நெரி

நெறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நெறி1நெறி2

நெறி2

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு சமயக் கொள்கைக்காகவோ தனிமனித ஒழுக்கத்துக்காகவோ ஏற்படுத்தப்பட்ட விதி அல்லது முறை.

  ‘அடிப்படை ஜனநாயக நெறிக்கு மாறுபடாத ஆட்சி’
  ‘குறள் நெறிப்படி வாழ்ந்தவர் அவர்’
  ‘பக்தி நெறி’
  ‘சைவ நெறி’
  ‘அருள் நெறி’