தமிழ் நெறிப்படுத்து யின் அர்த்தம்

நெறிப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (ஒன்றின் செயல்பாட்டை) நெறிமுறைக்கு உட்படுத்துதல்.

    ‘அரசு நிர்வாகத்தை நெறிப்படுத்த இந்த வழிமுறைகள் உதவும்’
    ‘உயர்கல்வியை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது’
    ‘சமுதாய நலனுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் தனிமனிதனின் உரிமைகளைச் சட்டம் நெறிப்படுத்த வேண்டும்’