நெளி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நெளி1நெளி2நெளி3

நெளி1

வினைச்சொல்நெளிய, நெளிந்து, நெளிக்க, நெளித்து

 • 1

  (புழு, பாம்பு முதலியவை) மடங்கியோ வளைந்தோ அசைதல்.

  ‘நறுக்கிய கத்திரிக்காயில் புழு நெளிந்தது’
  ‘இருட்டில் காற்றில் ஆடிய கயிறு பாம்பு நெளிவது போலிருந்தது’
  உரு வழக்கு ‘உதட்டில் சிரிப்பை நெளியவிட்டான்’

 • 2

  (வெட்கம் முதலியவற்றால் ஒருவரின் உடல்) நேராக நிற்காமல் வளைதல்.

  ‘அவன் பொறுமை இழந்து நெளிந்துகொண்டிருந்தான்’
  ‘என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வெட்கத்தில் நெளிந்தார்’

 • 3

  (பாத்திரம் போன்றவை அடிபட்டு) நசுங்குதல்.

  ‘குடம் கல்லில் இடிபட்டு நெளிந்துவிட்டது’

நெளி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நெளி1நெளி2நெளி3

நெளி2

வினைச்சொல்நெளிய, நெளிந்து, நெளிக்க, நெளித்து

 • 1

  (உடம்பு, கை, கால் ஆகியவற்றை) வளைத்தல்; கோணலாக்குதல்.

  ‘உடம்பை நெளித்துநெளித்து ஆடிய பாம்பு நடனம் நன்றாக இருந்தது’
  ‘உடலை நெளித்துச் சோம்பல் முறித்தபடி கண்விழித்தான்’

 • 2

  (பாத்திரம் போன்றவற்றைக் கீழே போட்டுவிடுவதாலோ அல்லது ஏதோ ஒன்றின் மீது இடித்துவிடுவதாலோ) நசுங்கிப்போகச் செய்தல்.

  ‘குடத்தைக் கீழே போட்டு நெளித்துவிட்டாயா?’

நெளி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நெளி1நெளி2நெளி3

நெளி3

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (தலைமுடியில் ஏற்படும்) வளைவு; சுருள்.

  ‘நெளிநெளியாகச் சுருண்டிருக்கும் முடியே குழந்தைக்கு மேலும் அழகூட்டியது’
  ‘அவருக்கு நெளிநெளியான முடி’

 • 2

  நேர்கோட்டில் அமையாமல் சற்று வளைந்திருக்கும் நிலை.

  ‘நெளி வளையல்’
  ‘நெளி மோதிரம்’