தமிழ் நெளிவு யின் அர்த்தம்

நெளிவு

பெயர்ச்சொல்

 • 1

  (பாதை, தெரு போன்றவற்றைக் குறித்து வரும்போது) வளைவு.

  ‘ரயில் பாதை வளைவோ நெளிவோ இல்லாமல் நேராக இருந்தது’

 • 2

  (கூந்தலைக் குறித்து வரும்போது) (தலைமுடி) சுருள்சுருளாக அமைந்திருக்கும் நிலை.

  ‘கூந்தல் கருகருவென்று நெளிவே இல்லாமல் இருந்தது’

 • 3

  (பாத்திரம் போன்றவை அடிபடுவதால்) லேசாக நசுங்கிக் காணப்படும் நிலை; ஒடுக்கு.

  ‘பாத்திரத்தின் வாயிலுள்ள நெளிவைப் பாத்திரக்காரனிடம் கொடுத்துதான் சரிசெய்ய வேண்டும்’