தமிழ் நொடிக்கு நூறு தரம் யின் அர்த்தம்

நொடிக்கு நூறு தரம்

வினையடை

  • 1

    (மிகக் குறைவான நேரத்தில்) பலமுறை; அடிக்கடி.

    ‘நொடிக்கு நூறு தரம் ‘அம்மா, அம்மா’ என்று கூப்பிட்டு ஏன் என்னைத் தொல்லைப்படுத்துகிறாய்?’
    ‘நீ ஊரிலிருந்து வந்துவிட்டால் போதும், உன் நண்பன் நொடிக்கு நூறு தரம் நம் வீட்டுக்கு வருகிறான். இல்லாவிட்டால் இந்தப் பக்கம் வருவதேயில்லை’