தமிழ் நொடித்துப்போ யின் அர்த்தம்

நொடித்துப்போ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    (வருமானம் அல்லது பொருளாதார வசதி இல்லாமல் ஒருவருடைய குடும்பம், வாழ்க்கை, தொழில்) சீர்குலைதல்.

    ‘நொடித்துப்போயிருக்கும் குடும்பங்கள் இந்தத் திட்டத்தினால் புத்துயிர் பெறும்’
    ‘கடை நொடித்துப்போனதற்கு அவர்தான் காரணம்’
    ‘நல்ல குடும்பத்தில் பிறந்து நல்ல முறையில் வாழ்ந்து இப்போது நொடித்துப்போய்விட்டார்’