தமிழ் நொறுங்கு யின் அர்த்தம்

நொறுங்கு

வினைச்சொல்நொறுங்க, நொறுங்கி

  • 1

    உடைந்து சிறுசிறு துண்டுகள் ஆதல்; (நசுங்கி) உருக்குலைதல்.

    ‘கல்வீச்சில் கடையின் கண்ணாடிக் கதவுகள் நொறுங்கின’
    ‘கையில் எடுக்கும்போதே அப்பளம் நொறுங்குகிறது’
    உரு வழக்கு ‘அவள் வைத்திருந்த நம்பிக்கைகளும் கனவுகளும் நொறுங்கின’