தமிழ் நேயர் யின் அர்த்தம்

நேயர்

பெயர்ச்சொல்

  • 1

    (வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை) விரும்பித் தொடர்ந்து கேட்பவர் அல்லது பார்த்து ரசிப்பவர்; (பத்திரிகையை) விரும்பித் தொடர்ந்து படிப்பவர்.

    ‘‘வணக்கம் நேயர்களே’ என்று கூறி விட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்தார்’
    ‘நேயர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ மீண்டும் தொடர்கதையாக வெளிவருகிறது’