தமிழ் நேர் யின் அர்த்தம்

நேர்

வினைச்சொல்நேர, நேர்ந்து

 • 1

  (ஒரு செயல், நிகழ்வு, விளைவு போன்றவை தற்செயலாக அல்லது சூழ்நிலையின் காரணமாக) நிகழ்தல்; ஏற்படுதல்.

  ‘அச்சிடுவதில் ஒரு சிறிய தவறு நேர்ந்துவிட்டது’
  ‘அன்று நேர்ந்த விபத்தில் நூற்றுக்கு மேலானவர்கள் உயிர் இழந்தனர்’
  ‘விழாவில் கலவரம் நேர்ந்துவிடாமலிருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’
  ‘தன் உயிருக்கு ஆபத்து நேரக்கூடும் என்ற அச்சம் அவனுக்கு இருந்தது’
  ‘கடைசியில் நம் சந்திப்பு இப்படியா நேர வேண்டும்?’

 • 2

  பாதிப்பு ஏற்படுதல்.

  ‘பேருந்து மட்டும் சிறிது சேதமடைந்துள்ளது. பயணிகளுக்கு ஒன்றும் நேரவில்லை’
  ‘அவருக்கு என்ன நேர்ந்தது? ஏன் இப்படி நடந்துகொள்கிறார்?’

தமிழ் நேர் யின் அர்த்தம்

நேர்

துணை வினைநேர, நேர்ந்து

 • 1

  (ஒரு வினையின் ‘செய்ய’, ‘செய்யும்படி’, ‘செய்யுமாறு’ ஆகிய வடிவங்களின் பின் வரும்போது) ஒரு செயல் நிகழ்ந்தது தற்செயலாக அல்லது சூழ்நிலையின் காரணமாக என்பதை உணர்த்தும் துணை வினை.

  ‘தந்தி வந்ததால் அவசரமாகப் புறப்பட்டு வர நேர்ந்தது’
  ‘கடைவீதியில் அவரைப் பார்க்கும்படி நேர்ந்தால் எப்படிப் பேசாமல் போவது?’

தமிழ் நேர் யின் அர்த்தம்

நேர்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  வளைவு இல்லாத நிலை.

  ‘நேர் வகிடு’
  ‘‘நேராக நில்’ என்றார் உடற்பயிற்சி ஆசிரியர்’
  ‘திருப்பங்களே இல்லாத நேரான சாலை’

 • 2

  சரியாக நேர்கோட்டில் இருக்கும் நிலை.

  ‘கோயிலின் நேர் பின்புறம் அவர் வீடு இருக்கிறது’

 • 3

  உயர் வழக்கு நிகர்.

  ‘மொழியை உயிருக்கு நேர் என்று கூறினார் கவிஞர்’

 • 4

  நேரடி.

  ‘இது என் நேர் அனுபவம்’

 • 5

  (உடன்பிறந்த சகோதரர்களில் அல்லது சகோதரிகளில் இருவரோ இரண்டுக்கு மேற்பட்டோரோ இருக்கும்போது) பேசுபவருக்கு முன் அல்லது பின் பிறந்தவரைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்.

  ‘எனக்கு நேர் மூத்த அண்ணன் ஆசிரியராக இருக்கிறார்’
  ‘என் நேர் இளைய தங்கைக்கு இப்போது மாப்பிள்ளை பார்த்திருக்கிறோம்’

 • 6

  (பெயரடையாக) (மின்சாரத்தைக் குறித்து வரும்போது) புரோட்டான்களைக் கொண்டிருக்கும்.

  ‘நேர் மின்னூட்டம்’
  ‘நேர் மின்னணு’

தமிழ் நேர் யின் அர்த்தம்

நேர்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலக்கணம்

தமிழ் நேர் யின் அர்த்தம்

நேர்

வினையடை

 • 1

  முற்றிலும்.

  ‘நேர் எதிரான கருத்து’
  ‘நேர் விரோதமான போக்கு’