தமிழ் நேர்காணல் யின் அர்த்தம்

நேர்காணல்

பெயர்ச்சொல்

 • 1

  நேர்முகத் தேர்வு.

  ‘பணிக்கான நேர்காணலின்போது மதிப்பெண் சான்றிதழ், நன்னடத்தைச் சான்றிதழ் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்’
  ‘கட்சியின் சார்பாகத் தேர்தலில் போட்டியிட மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது’
  ‘மாற்றல் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்குச் சென்னையில் நேர்காணல் நடைபெறும்’

 • 2

  பேட்டி.

  ‘முதலமைச்சரின் நேர்காணல் ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது’
  ‘அந்தச் சிறுபத்திரிகையில் வந்த நேர்காணல்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள்’