தமிழ் நேரங்காலம் யின் அர்த்தம்

நேரங்காலம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (பெரும்பாலும் எரிச்சலான தொனியில்) (ஒன்றைச் செய்வதற்கு) உரிய நேரம்; சரியான காலம்.

  ‘நேரங்காலம் தெரியாமல் வந்து என் கழுத்தை அறுக்காதே!’
  ‘விற்பனைப் பிரதிநிதிகளுக்கு நேரங்காலமே கிடையாது என்று அவர் புலம்பினார்’

 • 2

  பேச்சு வழக்கு (விதி செயல்படுகிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையில்) ஒருவரின் நேரம்.

  ‘என் நேரங்காலம் நன்றாக இருந்தால் நான் ஏன் உன்னிடம் வந்து கெஞ்ச வேண்டும்?’
  ‘நேரங்காலம் சரியாக இருந்தது என்றால் எல்லாம் நல்லபடியாக முடியும்’