தமிழ் நேர்செய் யின் அர்த்தம்

நேர்செய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

  • 1

    (வரவு செலவுக் கணக்கு, கொடுக்கல்வாங்கல் போன்றவற்றில்) வாங்கியவர் தர வேண்டிய தொகையைக் கொடுத்துவிட்டுக் கணக்கை முடித்தல்.

    ‘நீங்கள் கடைக்குத் தர வேண்டிய இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்துக் கணக்கை நேர்செய்துவிட்டுப் புதிதாக வாங்கிக்கொள்ளுங்கள்’
    ‘பழைய நிலக் குத்தகைப் பாக்கியை நேர்செய்த பிறகு புதிய குத்தகைபற்றிப் பேசலாம்’
    ‘இதுவரை எவ்வளவு பணம் வாங்கியிருக்கிறாய்? உன் கணக்கை நேர்செய்யாமல் எப்படிச் சம்பளம் கொடுக்க முடியும்?’