தமிழ் நேரடி யின் அர்த்தம்

நேரடி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  மற்றொன்றின் அல்லது மற்றொருவரின் இடையீடு இல்லாத நிலை.

  ‘நேரடி அனுபவத்தின் பாதிப்பில் எழுதப்பட்ட கதை’
  ‘மத்திய அரசின் நேரடிக் கண்காணிப்பில் இந்த நிறுவனம் இயங்குகிறது’
  ‘குற்றத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டவருக்குத் தண்டனை உண்டு’

 • 2

  நேருக்கு நேர் சந்தித்து அல்லது முகத்துக்கு எதிரே நிகழ்த்தப்படுவது; நேர் முகம்.

  ‘நேரடியாகப் பதில் சொல்லாமல் ஏன் மழுப்புகிறாய்?’
  ‘இரு நாட்டுப் படைகளும் இன்னும் நேரடித் தாக்குதலில் ஈடுபடவில்லை’
  ‘இந்தத் தொகுதியில் நேரடிப் போட்டி’

 • 3

  (விளையாட்டு, விழா முதலியவை நடந்து கொண்டிருக்கும்போதே அப்படியே) நடைபெறும் இடத்திலிருந்து உடனடியாக ஒலிபரப்பப்படுவது அல்லது ஒளிபரப்பப்படுவது; நேரலை.

  ‘மின்சாரத் தடையினால் நேரடி ஒலிபரப்பில் தடங்கல் ஏற்பட்டதற்காக வருந்துகிறோம்’
  ‘இந்த மாநாட்டை உள்ளூர்த் தொலைக்காட்சி ஒன்று நேரடியாக ஒளிபரப்புகிறது’

 • 4

  (போக்குவரத்துக்குறித்து வரும்போது) மாறிமாறிப் போகாமல் ஒரே வாகனத்தில் செல்லும் வகையில் அமைவது.

  ‘விழாவுக்குச் செல்ல நேரடிப் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன’