தமிழ் நேர்மாறு யின் அர்த்தம்

நேர்மாறு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (குறிப்பிடப்படும் சூழலில் ஒப்பிடுவதற்கு) முற்றிலும் எதிரான தன்மை.

    ‘குணத்தில் என் தம்பி எனக்கு நேர்மாறு’
    ‘நான் சொல்வதற்கு நேர்மாறாக அவன் எதையாவது கூறிக்கொண்டிருப்பாள்’
    ‘எதிர்பார்த்ததற்கு நேர்மாறான விளைவு ஏற்பட்டிருக்கிறது’