தமிழ் நேர்மை யின் அர்த்தம்

நேர்மை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (ஆதாயத்துக்காக) பொய் சொல்லுதல், ஏமாற்றுதல் போன்ற முறைகளைக் கையாளாமல் நியாயமாக நடந்துகொள்ளும் தன்மை; உண்மையைச் சொல்லி வெளிப்படையாக நடந்துகொள்ளும் தன்மை.

    ‘என் தந்தை நேர்மையாக வாழ்ந்தார்’
    ‘இப்படி அநியாயத்தை நியாயமாகத் திரித்து எழுத என் நேர்மை இடம்கொடுக்காது’
    ‘லஞ்சம் வாங்குகிற சில அதிகாரிகளால் பல நேர்மையான அதிகாரிகள்கூட அவமானப்பட நேர்கிறது’