தமிழ் நேரில் யின் அர்த்தம்

நேரில்

வினையடை

 • 1

  (மற்றொருவரின் மூலமாகவோ கடிதத்தின் மூலமாகவோ இல்லாமல்) குறிப்பிட்டவரிடம் அல்லது குறிப்பிட்ட இடத்தில் தானே.

  ‘அதிகாரியை நேரில் சந்தித்துத் தன் குறைகளைக் கூறினான்’
  ‘இந்த வேலையில் சேர விருப்பமுள்ளவர்கள் அலுவலகத்திற்கு நேரில் வரவும்’

 • 2

  (‘பார்த்தல்’, ‘கேட்டல்’ குறித்து வரும்போது) நேருக்கு நேராக.

  ‘அந்தக் கொடூரமான விபத்தை நான் நேரில் பார்த்தேன்’
  ‘காந்தியை நேரில் பார்த்ததாக என் தாத்தா சொல்லுவார்’
  ‘டி. கே. பட்டம்மாள் பாடி நீ நேரில் கேட்டிருக்கிறாயா?’