நேற்று -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : நேற்று1நேற்று2

நேற்று1

பெயர்ச்சொல்

 • 1

  ‘இன்று’ என்று குறிக்கப்படும் நாளுக்கு முந்திய நாள்.

  ‘நேற்று உங்கள் பிறந்தநாள் என்பதால் கோயிலுக்குப் போனீர்களா?’
  ‘நேற்றோடு எனக்கு அறுபது வயது நிறைவடைந்தது’
  ‘நேற்றிலிருந்து எனக்கு ஒரு வாரம் விடுமுறை’
  ‘நேற்று வெள்ளிக்கிழமை’

நேற்று -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : நேற்று1நேற்று2

நேற்று2

வினையடை

 • 1

  ‘இன்று’ என்று குறிப்பிடப்படும் நாளுக்கு முந்திய நாளில்.

  ‘அவர் ஊரிலிருந்து நேற்று வந்தார்’
  ‘இதை நீ நேற்றே சொல்லியிருக்கலாமே?’