தமிழ் நோ யின் அர்த்தம்
நோ
வினைச்சொல்
- 1
(உடலின் உறுப்புகள்) வலித்தல்.
‘நடந்துநடந்து கால் நோகிறது’‘தலை நோகிறது என்று அம்மா படுத்துவிட்டாள்’‘அவர் சொன்ன கதையைக் கேட்டு விலா நோகச் சிரித்தோம்’ - 2
(பெரும்பாலும் இறந்தகால வடிவங்கள் மட்டும்) (ஒருவரை அல்லது ஒன்றை) குறைகூறுதல்.
‘இப்படியெல்லாம் சீரழிய வேண்டியிருக்கிறதே என்று விதியை நொந்தான்’‘யாரை நொந்துகொண்டு என்ன பயன்? என் தலையெழுத்து இப்படிக் கஷ்டப்படுகிறேன்’ - 3
(மனம்) புண்படுதல்; வருந்துதல்.
‘அவர் மனம் நோகும்படி நடந்துகொள்ளாதே!’‘உனது பண்பற்ற பேச்சு அவளை நோகச் செய்துவிட்டது’‘அபாண்டமான குற்றச்சாட்டுகளால் மனம் நொந்து பேசினார்’ - 4
(ஒரு செயலுக்காக) வருத்தப்படுதல்; குறைபட்டுக்கொள்ளுதல்.
‘‘உன்னை நம்பிக் காரியத்தில் இறங்கினேன் பார்’ என்று தன்னையே நொந்துகொண்டார்’‘‘படித்து என்ன பயன்? வேலை கிடைக்கவில்லையே’ என்று நொந்துகொண்டான்’